தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

Date:

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினால் இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை (17) பி.ப. 4.00 மணி முதல் மத்திய தபால் பரிமாற்றக நடவடிக்கைகளிலிருந்தும், நாளை நள்ளிரவு 12.00 மணி முதல் நாடு முழுவதிலுமுள்ள தபால் நிலையங்களிலும் நிர்வாக அலுவலகங்களிலும் நடவடிக்கைகளிலிருந்தும் தொடர் பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

அதற்கமைய 19 கோரிக்கைகளை முன்வைத்துள்ள அவர்களது தொழிற்சங்க நடவடிக்கையின் அடிப்படையில், அவர்கள் வலியுறுத்தும் பிரதான கோரிக்கைகளை ஏற்க முடியாதவை என தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார தெரிவித்துள்ளார்.

இந்த வேலைநிறுத்தத்தில் முன்வைக்கப்பட்ட பிரதான விடயங்களாக, அரசின் சுற்றறிக்கை இல. 10/2025 இற்கு அமைய மேலதிக நேர (Overtime) கொடுப்பனவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தபால் திணைக்களத்தின் அனைத்து நிர்வாக அலுவலகங்கள் மற்றும் கணக்கு அலுவலகங்களில் கைவிரல் அடையாள (Biometric) பதிவு முறையை கட்டாயப்படுத்திய தீர்மானத்திற்கு எதிர்ப்பு ஆகியன உள்ளடங்குகின்றன.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...