தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

Date:

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற் கொண்டு இன்று (06) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பிற பட்டறைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2025 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கும் மேலதிகமாக, பரீட்சை தொடர்பான கேள்விகள் அல்லது அதுபோன்ற உள்ளடக்கம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று பரிந்துரைக்கும் சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள் அல்லது விளம்பரங்களை ஒன்லைன் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடுவது மற்றும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மீறும் எந்தவொரு தனிநபர், நிறுவனம் தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (26) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என...

இஸ்ரேல் ஆதரவு எம்பி-க்கு காபி வழங்க மறுப்பு: புரூக்ளின் Coffee Shop மீது அமெரிக்க நீதித்துறை அதிரடி விசாரணை!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்த யூத நாடாளுமன்ற உறுப்பினரான டான் கோல்ட்மேனுக்கு...

இலங்கையில் 50,000ஐ நெருங்கும் டெங்கு நோயாளர்கள்!

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு...

2027ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான சுற்றுநிருபம் வெளியீடு!

2027ஆம் கல்வியாண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு (Grade 1) மாணவர்களை அனுமதிப்பதற்கான...