முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த 2025.01.18ம் திகதி அகில இலங்கை ரீதியாக நடாத்திய அல்-குர்ஆன் மனனப் போட்டியின் 30 ஜுஸ்உகளுக்கான பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற வெலிகம மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும் வரகாபொலயைச் சேர்ந்த ஸஃத் அப்துர் ரஹ்மான் மக்கா முகர்ரமாவில் நடைபெறுகின்ற “மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்டுள்ளார்.