PULSED (Puttalam Union for Literacy, Social and Encouragement Development) அமைப்பின் ஏற்பாட்டில், புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களின் கௌரவிப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று புத்தளம் மற்றும் புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு பெருமை சேர்த்த கலாநிதி ஆஸாத் சிராஸ் அவர்களுக்கு, PULSED அமைப்பின் சார்பில் நினைவுச் சின்னம் வழங்கி சிறப்பு கௌரவம் செய்யப்பட்டது.