இத்தாலியின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகை!

Date:

இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி (Maria Tripodi), 2025 செப்டம்பர் 3 முதல் 5 வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இது கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில், இத்தாலியில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் அதி உயர்மட்ட விஜயமாகும்.

தனது விஜயத்தின் போது, ​​பிரதி அமைச்சர் த்ரிபோடி, இலங்கை-இத்தாலி அரசியல் ஆலோசனைகளின் தொடக்க அமர்வில், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுடன் இணை தலைமை தாங்குவார்.

இவ்விஜயத்தின் போது அரசியல் ஆலோசனைப்பொறிமுறையை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

 

இது இரு நாடுகளுக்கும் இடையிலான உரையாடலுக்கான கட்டமைக்கப்பட்ட செயற்பாட்டுச் சட்டகத்தை வழங்குகிறது.

 

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1952 இல் நிறுவப்பட்டன.

பிரதி அமைச்சர் த்ரிபோடி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்திப்பதுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

Popular

More like this
Related

வடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்து உலக வங்கியுடன் கலந்துரையாடல்

2026 தொடக்கம் 2031 வரையான 06 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி...

சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!

செல்லுபடியாகும் சர்வதேச வெளிநாட்டு அனுமதிகளின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான...

இந்தியா-பாகிஸ்தான் போட்டி உறுதி; பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

கேள்விக் குறியாவிருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக்...

பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் சாத்தியம்

இன்றையதினம் (10) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும்...