இஸ்ரேலுக்கு இலங்கை தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் ஈடுபட்டுள்ள மோசடி இடைத்தரகர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்த வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணையத்தின் (PIBA) அதிகாரிகளுடன் நேற்று (01) நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கருத்துக்களை கூறினார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் இரண்டு முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தின.
முதலாவது, தாதியர் ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு பணத்திற்காக அழுத்தம் கொடுக்கும், நிலம் அல்லது சொத்தை உத்தரவாதமாக கோரும் மற்றும் பிற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இடைத்தரகர்களுக்கு எதிரான முறைப்பாடுகள்.