ஐநா பொதுச் சபையில் பெல்ஜியம் பலஸ்தீனை அங்கீகரிக்கும்: ஹமாஸ் தலைவர்களை அந்நாட்டுக்கு வேண்டத்தகாதவர்களாக அறிவிக்கும்!

Date:

முன்வரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பெல்ஜியம் பலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் மாக்சிம் பிரீவோட் இன்று அறிவித்தார்.

காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இன ஒழிப்பின் மீது அழுத்தம் கொடுக்கும் நாடுகளின் வளர்ந்து வரும் பட்டியலில் இதுவும் ஒன்று.

அவுஸ்திரேலியா, பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இதே போன்ற முடிவுகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது இரு-நாட்டு தீர்வுக்கான சர்வதேச அறைகூவல்களை மேலும் தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“பெல்ஜியம் நியூயார்க் பிரகடனத்தில் கையொப்பமிட்டவர்களுடன் இணைந்து கொள்ளும், இஸ்ரேலுடன் அமைதியாக இணைந்து வாழும் ஒரு பலஸ்தீன அரசுக்கான இரு-நாடுகள் தீர்வுக்கு இது வழி வகுக்கும் – “, என்று பிரீவோட் X இல் ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“பலஸ்தீனத்தில், குறிப்பாக காசாவில் வெளிப்படும் மனிதாபிமான துயரத்தினை கருத்தில் கொண்டும், சர்வதேச சட்டத்தை மீறி இஸ்ரேல் நிகழ்த்தி வரும் வன்முறைக்கு பதிலளிக்கும் வகையிலும்” இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

அறிவிப்பின் ஒரு பகுதியாக, பெல்ஜியம் இஸ்ரேல் மீது 12 “உறுதியான” தடைகளையும் விதிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய குடியேற்றங்களிலிருந்து இறக்குமதியைத் தடை செய்தல், இஸ்ரேலிய நிறுவனங்களுடன் பொது கொள்வனவுக் கொள்கைகளை மதிப்பாய்வு செய்தல் மற்றும் பெல்ஜியத்தில் ஹமாஸ் தலைவர்களை வேண்டத்தகாதவர்களாக ( persona non grata) அறிவித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...