ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ளது.
சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. இவ்வனர்த்தங்கள் காரணமான சம்பவங்களில் 2,800 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான அனர்த்தங்களில் சிக்கிய 1,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தற்போது 622 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் குணார் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.0 என்ற அளவில் பதிவாகியிருந்தது. நங்கஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் மிகப் பயங்கர சேதம் ஏற்பட்டது. ஆனால், அதனைத் தொடர்ந்து நேரிட்ட நிலநடுக்கம் நிலையை மேலும் மோசமாக்கியது.
பெரும்பாலான வீடுகள் மண் மற்றும் செங்கல்லால் கட்டப்பட்டது என்பதால், இந்த நிலநடுக்கமே போதும் அவை நிலைகுலைய என்ற அளவில் பல கிராமங்கள் வெறும் மண் மேடுகளாகக் காட்சியளிக்கிறது.
இங்கே பல வீடுகளின் கட்டட இடிபாடுகளுக்குள் குழந்தைகளும் பெரியவர்களும் இளைஞர்களும் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், இறந்தவர்களின் உடல்களை எடுக்கக் கூட யாரும் உதவ வரவில்லை என்றும், தயவுகூர்ந்து எங்களுக்கு உதவ வாருங்கள் என்றும் உயிரை மட்டும் விட்டுவைத்த நிலநடுக்கத்தில் சிக்கித் தப்பியவர்கள் கண்ணீருடன் கோருகிறார்கள்.
கிழக்கு ஆப்கானிஸ்தான் என்பது, மலைப் பகுதியையொட்டிய கிராமப் பகுதி என்பதால் இங்கு தொலைத்தொடர்பு சேவைகளும் இல்லாததால் நிலைமை மிக மோசம் என்கிறார்கள்.
அங்கிருந்து வரும் விடியோக்கள், இடிபாடுகளுக்குள் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவதும் மருத்துவமனைகளுக்கு மக்கள் வந்து கொண்டிருப்பதும் பதிவாகியிருக்கிறது.
இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்கள் பல மணி நேரங்களுக்குப் பிறகே மீட்கப்பட்டுள்ளதாகவும், நிலநடுக்கத்தின்போது, ஒட்டுமொத்த மலையும் குலுங்கியதாக மக்கள் உணர்ந்ததாகக் கூறப்படுகிறது.