முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பண்டுவஸ்நுவர அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் வழிகாட்டல் கருத்தரங்கு

Date:

குருநாகல், பண்டுவஸ்நுவர பிரதேச அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் பாவனையின் விபரீதங்கள்  என்ற தலைப்புக்களில் ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கொன்று 30 ஆம் திகதி பண்டார கொஸ்வத்த மன்பஉல் கைராத் ஜும்ஆ பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ்,இந்தக்கருத்தரங்கு இடம்பெற்றது.

வளவாளர்களாக எம்.என்.என்.எம்.ரமீஸ் (ஆசிரியர்) மற்றும் ஏ.ஆர்.ஏ.ஹபீழ் (அபிவிருத்தி உத்தியோகத்தர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பண்டுவஸ்நுவர பிரதேச பிரிவுக்குட்பட்ட அஹதிய்யா பாடசாலை மாணவர்கள்,அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்கள்,அதிபர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...

அற்புதப் பிறவியாக பிறந்த உத்தமர் (ஈஸா) இயேசுவின் பிறப்பு குறித்து புனித அல்குர்ஆன் கூறுவது என்ன?

ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய...

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை...