போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

Date:

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பரவல் குறித்து பொலிஸாருக்கு நேரடி தகவல்களை வழங்குவதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்களின் தொலைபேசி இலக்கங்கள் முன்னதாக, ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.

சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்களின் கீழ் உள்ள மாவட்ட பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் கண்காணிப்பாளர்களின் தொலைபேசி இலக்கங்களும் நேற்று வெள்ளிக்கிழமை (03) வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றிற்கு தொடர்பினை ஏற்படுத்தி, போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்கலாம் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதில் பொதுமக்களின் ஆதரவு பெரிதும் பாராட்டப்படுவதாகவும், பொதுமக்களால் வழங்கப்படும் தகவல்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்க இலங்கை பொலிஸ் பாடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபையின் வெற்றிடத்துக்கு சமீர தனுஷ்க டி சில்வா நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா...

டெல்லி குண்டு வெடிப்பு: வெளிப்படையான, உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் வேண்டுகோள்

செங்கோட்டை வெடிச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்...

நம்பிக்கையை நசுக்கிய வரவு–செலவுத்திட்டம்: புத்தளம் மரிக்காரின் கவிதை வரிகள்!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வரவு–செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி ஒதுக்கியுள்ள நிதித்திட்டங்கள் குறித்து...

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது...