டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

Date:

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த நிபந்தனைகளை ஏற்பதாக ஹமாஸ் அறிவித்திருக்கிறது.

காசா போர் முடிவுக்கு வருவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த திட்டத்தின் சில அம்சங்களை ஏற்க ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலிய கைதிகளை விடுவிப்பது மற்றும் காசா நிர்வாகத்தை ஒப்படைப்பது போன்ற சில முக்கிய நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்றுக்கொண்டது. இருப்பினும், இத்திட்டத்தின் பல அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “டிரம்ப் தனது 20 அம்ச திட்டத்தை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ ஞாயிற்றுக்கிழமை வரை ஹமாஸுக்கு கால அவகாசம் அளித்திருந்தார். இதற்கு ஹமாஸ் தனது பதிலை வழங்கியுள்ளது. ஆனால், ஹமாஸ் கோருவது போல, மற்ற நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுமா? என்பது குறித்து டிரம்ப் இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை.

குறிப்பிடத்தக்க வகையில், ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நிபந்தனை குறித்து எந்த கருத்தையும் ஹமாஸ் தெரிவிக்கவில்லை. இந்த நிபந்தனையை ஹமாஸ் முன்னதாகவே நிராகரித்திருந்தது. காசா மீதான போர் நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம், உடனடி உதவிப் பொருட்கள் விநியோகம் போன்றவற்றை டிரம்ப் முன்மொழிந்திருந்தார்.

காசா மீதான போரை முடிவுக்கு கொண்டுவரவும், கைதிகள் பரிமாற்றம் செய்யவும், உடனடி உதவி வழங்கவும் அரபு, இஸ்லாமிய மற்றும் சர்வதேச நாடுகள் மற்றும்  டொனால்ட் டிரம்ப் எடுத்து வரும் முயற்சிகளை ஹமாஸ் பாராட்டுகிறது என்று ஹமாஸ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது” என ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.

Popular

More like this
Related

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...

இலங்கையின் பேசப்படாத தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள்

-ரிசா யெஹியா சிரேஷ்ட கட்டிடக் கலைஞர். பகுதி-1 இலங்கையில் தேசிய பாதுகாப்பு இன்னும் பெரும்பாலும்...

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு...

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5...