தாய் நாட்டிற்கு பெருமைத் தேடித்தந்த ஓட்ட வீராங்கனை பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு அ.இ.முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் வாழ்த்து

Date:

கடந்த 25 ஆம் திகதி இந்தியாவில் நடைபெற்ற 2025 தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்டு 3 தங்கப்பதக்கங்களை வென்ற மாணவி பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் தலைவர் ஷாம் நவாஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இம்மாணவியின் சாதனை தேசிய மட்டத்தில் ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படும் அதேவேளை பல செய்திகளையும் சொல்வதாக அமைந்துள்ளது.

திறமைக்கு இடம்கொடுக்கப்பட்டால் எப்படியெல்லாம் சாதிப்பார்கள் என்பதற்கு பாத்திமா ஷபியா ஒரு உதாரணமாகும்.

இனமத பேதத்துக்கு அப்பால் திறமைக்கு முன்னுரிமையளிப்பதன் முக்கியத்துவத்தை ஷபியாவின் சாதனை தந்திருக்கிறது என்றும் ஷாம் நவாஸ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...

இலங்கையின் பேசப்படாத தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள்

-ரிசா யெஹியா சிரேஷ்ட கட்டிடக் கலைஞர். பகுதி-1 இலங்கையில் தேசிய பாதுகாப்பு இன்னும் பெரும்பாலும்...

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு...

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5...