25 வயதிற்கு மேற்பட்டவர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் (Stroke) ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்படவுள்ள உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், களுத்துறை போதனா வைத்தியசாலையின் விசேட நரம்பியல் வைத்தியர் சுரங்கி சோமரத்ன இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
பக்கவாத நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 30 வீதமானவர்கள் 20 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று வைத்தியர் சுரங்கி சோமரத்ன சுட்டிக்காட்டினார்.
பக்கவாதம் ஏற்படுவதற்கான பிரதான அபாய காரணியாக உயர் இரத்த அழுத்தம் (Hypertension) அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 50 வீதமான பக்கவாத சம்பவங்களுக்கு உயர் இரத்த அழுத்தமே காரணமாக உள்ளது.
பக்கவாதத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசேட நரம்பியல் வைத்தியர் சுரங்கி சோமரத்ன விரிவாக எடுத்துரைத்தார்.
