பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை வழங்க பொலிஸ் மா அதிபர் இணக்கம்

Date:

பாதுகாப்பு கோரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸ் மா அதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்தார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய, உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (31) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் கலந்துகொண்டிருந்ததோடு, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது பாதுகாப்பு கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க பொலிஸ் மா அதிபருடன், சபாநாயகரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...