அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் உபதலைவராகவும் செய்ற்பட்ட வந்ததோடு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றுக்குழு உறுப்பினராகவும் விலும் செயற்பட்டு வந்து கடந்த 25 வருடங்களாக அமைப்பின் முன்னேற்றத்துக்காகவும் சமூக சன்மார்க்க வளர்ச்சிக்காகவும் பெரும் பங்காற்றிய அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி, எம்.ஏ.) அவர்களுக்கான பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (26) காலை 8.30 மணி முதல் மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் கலந்துகொள்வதோடு அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம் மதனி தலைமையில் நடைபெறவுள்ளது.
(அஸ்லம் எஸ்.மெளலானா)
