பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களை அதிகம் கொண்ட தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருப்பதை நிலவரங்கள் காட்டுகின்றன.
அதாவது, ஒட்டுமொத்தமாக பீகார் சட்டப்பேரவை 243 தொகுதிகளைக் கொண்டிருக்கிறது.
தற்போதுவரை, முஸ்லிம் மக்களை அதிகம் கொண்ட 16 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாக நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிதீஷ் குமாரின் ஜனதா தளம், எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளதாகவும், கடந்த 2020 தேர்தலைக் காட்டிலும், 2025 தேர்தலில், கூடுதலாக இதுபோன்ற 8 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், சிராக் பாஸ்வானின் எல்.ஜே.பி முஸ்லிம் வாக்காளர்களை அதிகம் கொண்ட 6 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2022 பிகார் ஆய்வில் முஸ்லிம் மக்கள் 17.7 சதவிகிதம் இருந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலில் இவர்களில் 80 சதவிகித வாக்குகளும் 2020 தேர்தலில் 77 சதவிகித வாக்குகளும் மகாகத்பந்தன் கூட்டணிக்கே கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த 2025 தேர்தலில், இந்த பகுதிகளில் எல்லாம் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். மகாகத்பந்தன் கூட்டணி வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
