தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு-செலவுத் திட்டமாகும்.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்ட உரையை ஆற்றுவார்.
2026 வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சனிக்கிழமை தொடங்கும்.
வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு மொத்தம் ஆறு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும். குழு நிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 5 வரை 17 நாட்களுக்கு நடைபெறும்.
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.
