11 வயதிற்குட்பட்ட உலக மேசைப் பந்து தரவரிசையில் இலங்கையைச் சேர்ந்த தாவி சமரவீர 3ம் இடம்பிடித்துள்ளார்.
எந்தவொரு வயது சார்ந்த பிரிவிலும் இலங்கை வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட உயர் தர வரிசை இதுவாகும்.
சர்வதேச மேசைப் பந்து சம்மேளனத்தின் தரவரிசை வெளியாகியுள்ள நிலையில் தாவி சமரவீர 52 புள்ளிகளை மேலதிகமாக பெற்று மொத்தமாக 200 புள்ளிகளுடன் 3ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சென்ட். தோமஸ் கல்லூரியில் கல்வி கற்கும் தாவி சமரவீர சர்வதேச தரம்வாய்ந்த பல போட்டிகளில் பங்கேற்றுள்ளதுடன் அவற்றில் சிறந்த திறமைகளையும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மேசைப் பந்து விளையாட்டு வரலாற்றில் தாவி சமரவீர புதிய மைல்கல்லை கடந்துள்ளார்.
