காத்தான்குடியில் ஈச்ச மரமும் கத்தாரில் அரச மரமும்…!

Date:

– சஜீர் முஹைதீன்

இது வேற எங்கயும் இல்ல கட்டார்தான் இது. ஒரு ரோட் நெடுக அரச மரங்கள நாட்டி வெச்சிருக்காங்க பார்க்க அழகாவும் இருக்கு. இங்க நிறைய அரபிகள்ட வீட்டுலயும் அரச மரங்கள் வெச்சிருக்காங்க பெரிசா வளர்ந்தும் இருக்கு.

அரச மரம் நல்ல நிழல் தரக்கூடியது… அதனால் இயல்பிலேயே அரச மரத்தடிவாரம் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். அரச மரம் வளர பெரிதாக நீரும் தேவைப்படுவதில்லை. வறண்ட நிலத்தில் கூட மிக லாவகமாக வளரும் தன்மை அதற்குள் இருக்கின்றது.

அதிகம் ஒட்சீஜனை வெளியிடக்கூடிய மரங்களில் அரச மரம் மிக முக்கியமானதாம். அதுமட்டுமா அதுட இலை, பட்டை, குச்சில எல்லாம் அதிக மருத்துவக் குணமும் இருக்கின்றதாம். இதனாலோ என்னவோ மதப் போதகர்கள் அரச மரத்தடியைத் தேர்ந்தெடுத்தார்கள்.

இந்த மகிமைகளை உணர்ந்து இன்று பாலைவன தேசங்களில் அரச மரங்கள் வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அவற்றைப் பார்க்கும் போது பலர்ட மனசுல தோணுறதுதான் இதுவே இலங்கையாக இருந்தா ஒவ்வொரு மரத்தடியிலும் ஒரு குட்டி சிலை முளைத்திருக்கும் என்று.

மரம் முளைத்து சிலை வைத்த காலம் போய் இப்போ சிலை முளைத்து பின் மரம் வளர்க்கும் காலம் உருவாகிவிட்டது.

இந்தப் பயம்தான் இம்புட்டு பயன் தரக்கூடிய மரத்தை வீட்டுத் தோட்டங்களில் காணுகின்ற போது முளையிலேயே பிடுங்கி எறியத் தோணுகின்றது பலருக்கு. அப்படிச் செய்யாவிட்டால் பிற்காலத்தில் தங்களின் இருப்பிடத்தையே அது பிடுங்கிவிடலாம் என்று அஞ்சுகின்றனர்.

இதனால் அனைத்து சமூகத்தினரும் விருப்பத்தோடு வளர்கப்பட வேண்டிய மரத்தோடு சேர்ந்து மதமும் வளர்வதால் விருப்பம் இல்லாமலே பிடுங்கப்படுகின்றது. நடுவதும் தடுக்கப்படுகின்றது.

புனிதம் மரத்திலல்ல மனதில்தான் இருக்கின்றது என்பதை உணராவிட்டால்… மரத்தை மரமாகப் பார்க்காமல் மதமாக பார்த்தால்… நடுவதும் பிடுங்குவதும் இனவாதமாகத் தான் தெரியும்.

மரத்திற்கு மத அடையாளம் கொடுக்காவிட்டால் காத்தான்குடியில் ஈச்ச மரமும் வளரும் கட்டாரில் அரச மரமும் வளரும்.

Sajeer Muhaideen முகப்புத்தகத்திலிருந்து…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான...

மத்ரஸா மாணவன் மரணம்: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எழும் தீவிர கேள்விகள்

வெலிமடை மதரஸா மாணவன் ஸஹ்தி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக நாடு...

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி...

காசாவுக்கான ட்ரம்பின் திட்டத்திற்கு ஐ.நா. ஆதரவு: ஹமாஸ் நிபந்தனைகள் நிராகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு ஐ.நா. ஒப்புதல்...