டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
இன்று (28) காலை வரையான தகவலின்படி, மோசமான வானிலை தொடர்பான அனர்த்த சம்பவங்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
14 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நான்கு வீடுகள் முழுமையாகவும், 666 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
