தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை (28) சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசன பணிப்பாளர் ஜெனரல் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மிகப்பெரிய ஆபத்து உள்ளது. தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து வான் கதவுகள் வழியாக வினாடிக்கு 65,000 கன அடி வெளியேற்றப்படுகிறது. இது ஆற்றின் கொள்ளளவை விட தோராயமாக மூன்று மடங்கு அதிகம்.
அதன்படி, ஆற்றின் இரு கரைகளும் முழுமையாக நீரில் மூழ்கும். தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று மாலை அல்லது நாளைக்குள் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. மருத்துவமனை, குறிப்பாக குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
