பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
14 அல்லது 15 வயதிற்குள், பல பாடசாலை மாணவர்கள் சிகரெட்டை முயற்சிக்கத் தொடங்குகிறார்கள்.
இவ்வாறு புகைபிடிப்பது நுரையீரல் தொடர்பான நோய்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கும் என்றும் அவர் கூறினார்.
