திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

Date:

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான தடையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விகாரையின் விகாராதிபதி, திருகோணமலை கல்யான வம்ச திஸ்ஸ தேரர், இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மனு விசாரணைக்கு வந்தபோது, இந்தச் சிக்கலை சமாதானமான முறையில் தீர்த்துக்கொள்வது பொருத்தமானது என்று நீதியரசர்கள் குறிப்பிட்டனர்.

அதன்படி, கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உரிய இடத்திற்குச் சென்று, குறித்த கட்டுமானம் குறித்துப் பரிசோதனை செய்து, அதன் முடிவுகளுக்கு அமைய பொருத்தமான முடிவை எடுப்பதற்கு, மனுதாரர் தரப்பு மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்தனர்.

அதன்படி, குறித்த மனுவை டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் குழு, அது தொடர்பான முன்னேற்றத்தை அன்றைய தினம் அறிவிக்குமாறும் உத்தரவிட்டது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...