வெலிமடை மத்ரஸா மாணவன் மரணம்: நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

Date:

வெலிமடைப் பகுதியில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் சந்தேகத்துக்கிடமான  நிலையில் மரணமடைந்ததை அடுத்து, அப்பகுதி முஸ்லிம் சமூகத்தினர் நேற்று தீவிரமான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

கல்வி பயின்று வந்த மத்ரஸாவின் குளியலறையில் அந்த சிறுவன் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

முதல் கட்ட தகவல்களில் இதை தற்கொலை என கூறப்பட்டிருந்தாலும், மரணத்தின் சூழ்நிலைகள் தெளிவாக விளக்கப்படாததால் பலரும் சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வெலிமடைப் பள்ளிவாசல் முன்பாக திரண்ட பொதுமக்கள், சிறுவனின் மரணம் தொடர்பாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தி உண்மை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் ஊடகங்களிடம்,
“சிறுவன் நவம்பர் 03 ஆம் தேதி மரணமடைந்தான். என்ன காரணம் என்று இதுவரை யாரும் தெளிவுபடுத்தவில்லை. இப்படிப் பட்ட வயதில் உள்ள குழந்தை தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணமே வராது. இது ஒரு மர்ம மரணம்” எனக் கூறி வருத்தமும் கோபமும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...