அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று காலை தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று காலை கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
கலந்துரையாடல் நிறைவடைந்த பின்னர் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அவசர நிறைவேற்று மற்றும் மத்திய குழுவைக் கூட்டவுள்ளதாகவும், அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளனர்.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, இந்த கலந்துரையாடல் குறித்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியிருந்தார்.
நாங்கள் ஜனாதிபதிக்கு தெளிவாக விளக்கமளித்தோம்.
இந்த வரவு செலவுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்திலும் சுகாதார அமைப்பை நிலைநிறுத்துவதற்கு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் நாங்கள் பல யோசனைகளை முன்வைத்துள்ளோம்.
விசேட வைத்தியர்களை நாட்டில் தக்கவைத்துக்கொள்வதற்காக விசேட கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம் என்றார்.
