சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து: உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட 42 இந்திய யாத்ரீகர்கள் பலி.

Date:

சவூதி அரேபியாவில் டீசல் டேங்கர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில்   42 இந்திய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்றுகொண்டிருந்தனர்.

இந்த நிலையில், மதீனாவுக்கு 160 கி.மீ. தொலைவில் உள்ள முஃப்ரிஹாத் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் டீசல் டேங்கர் லாரியின் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பேருந்தில் பயணம் மேற்கொண்டவர்களில் பெரும்பாலும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நிலையில், 20 பெண்கள், 11 குழந்தைகளும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தை அடைவதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டதாகவும், உடல்களை அடையாளம் காண்பது கடினம் என்றும் செளதி மீட்புப் படையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் சவூதி  அரேபியா நாட்டு அதிகாரிகளிடம் விபரங்களைச் சேகரிக்க கோரி தெலுங்கனா முதல்வர் டெல்லியில்   அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.”

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...