இந்திய அரசாங்கம் வழங்கிய நன்கொடைகள் இலங்கை வந்தடைந்துள்ளது !

Date:

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக இந்திய நிவாரண உதவி விமானம் இலங்கை வந்தடைந்தது.

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்க நிவாரண பொருட்களை ஏற்றிச் வந்த இந்திய விமானப்படையின் C-130 விமானம் (29) இன்று அதிகாலை 01.45 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட சுகாதாரப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை பெற, இந்திய உயர் ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த ஆலோசகர் (வளர்ச்சி ஒத்துழைப்பு) மைத்ரே குல்கர்னி மற்றும் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் மன்தீப் சிங் நேகி உள்ளிட்ட இந்திய விமானப்படை அதிகாரிகள் குழுவும், இலங்கை விமானப்படையின் தலைமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர உள்ளிட்ட விமானப்படை அதிகாரிகள் குழுவும் வருகை தந்தனர்.

Popular

More like this
Related

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...