உலகின் மிகப்பெரும் பெயாரிங் உற்பத்தியாளரான SKF உடன் பங்காளித்துவத்தை அமைக்கும் C.W. Mackie PLC

Date:

இலங்கை, கொழும்பு, 2025 ஒக்டோபர் 10: இலங்கையின் முன்னணி மற்றும் பல்வகை கூட்டு நிறுவனங்களில் (diversified conglomerates) ஒன்றான C.W. Mackie PLC, உலகின் மிகப்பெரிய பெயாரிங் (Bearing) உற்பத்தியாளரான SKF உடன் ஒரு முக்கிய பங்காளித்துவத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம், SKF இன் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக C.W. Mackie PLC நியமிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ஒக்டோபர் 10ஆம் திகதி, C.W. Mackie PLC மற்றும் SKF இந்தியா (Industrial) லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளும் கலந்துகொண்ட ஒரு பிரமாண்டமான நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இரு நிறுவனங்களுக்கிடயிலான இந்த ஒத்துழைப்பானது, நம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகிய வலுவான பாரம்பரியங்களைக் கொண்ட இரண்டு நிறுவனங்களையும் ஒன்றிணைக்கிறது.

இந்த பங்காண்மையானது C.W. Mackie இன் கைத்தொழில்துறை தயாரிப்புகள் பிரிவை (Industrial Products Cluster) மேலும் வலுப்படுத்துகிறது. இது அதன் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள Danfoss (டென்மார்க்), Bitzer (ஜேர்மனி), Frascold (இத்தாலி), Telwin (இத்தாலி), Cebora (இத்தாலி), Chosun (தென் கொரியா), Castolin Eutectic (ஐரோப்பா), Hempel Paints (டென்மார்க்) போன்ற புகழ்பெற்ற உலகளாவிய வர்த்தகநாமங்களுடனான ஒத்துழைப்புகளுக்கு மேலும் வலுவை ஏற்படுத்துகிறது.

1907 இல் நிறுவப்பட்ட SKF, உலகளாவிய ரீதியில் சுமார் 130 நாடுகளில் 17,000 இற்கும் மேற்பட்ட விநியோகஸ்தர் நிலையங்கள் மூலம் இயங்குகிறது. பெயாரிங் தொழில்நுட்பத்தில் முன்னோடியாd SKF, உலகின் மிகவும் புத்தாக்கமான bearings, seals, lubrication systems, condition monitoring solutions உள்ளிட்ட தீர்வுகள் மற்றும் உராய்வைக் குறைப்பதற்கான சேவைகளை வழங்கி வருகிறது.

இது சுவீடனின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும் என்பதுடன், உலகின் முதலிடத்தில் உள்ள 2,000 பொதுக் கூட்டு நிறுவனங்கள் (public corporations) பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பெயாரிங் தொழில்நுட்பத்திலும், மேம்பட்ட தொழில்துறை தீர்வுகளிலும் ஒரு முன்னோடியாக இந்நிறுவனம் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இது குறித்து, C.W. Mackie PLC இன் பணிப்பாளரும் குழுமத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான மங்கள பெரேரா தெரிவிக்கையில், “இந்த பங்காளித்துவமானது, இரு நிறுவனங்களுக்கும் மற்றும் இலங்கையின் கைத்தொழில்துறை துறைக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.

SKF இன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் எனும் வகையில், உலகின் மிகவும் மேம்பட்ட பெயாரிங் தீர்வுகளை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாம் பெருமையடைகிறோம்.

இந்த பங்காண்மையானது உயர் தரம், நம்பகமான தயாரிப்புகளை வழங்குவதற்கான எமது உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், புத்தாக்கம் நிறைந்த, உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பங்கள் மூலம், இலங்கை முழுவதும் உள்ள தொழில்துறைகளுக்கு ஊக்கமளிக்கும் எமது நோக்கத்தையும் பலப்படுத்துகிறது.” என்றார்.

இந்த அறிமுகத்தின் ஒரு அங்கமாக, இலங்கையில் ஒரு பிரத்தியேக கையடக்கதொலைபேசி செயலியையும் SKF அறிமுகப்படுத்தியுள்ளது. இது தயாரிப்பின் உண்மைத்தன்மையை உடனடியாகச் சரிபார்க்கவும், போலி தயாரிப்புகளை (counterfeit items) கண்டறியவும் வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. இந்த முயற்சியானது, வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்கும், கைத்தொழில்துறைகளைப் பாதுகாப்பதற்கும், உண்மையான தயாரிப்புகள் மட்டுமே சந்தையைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கும் C.W. Mackie மற்றும் SKF இன் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.

இது குறித்து SKF இந்தியா நிறுவனத்தின் தொழில்துறைச் சந்தைகளுக்கான பணிப்பாளர் சுஜீத் பாய் (Sujeeth Pai) தெரிவிக்கையில், “இலங்கையில் நீண்டகால நம்பிக்கை மற்றும் விசேடத்துவத்தின் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு நிறுவனமான C.W. Mackie PLC உடன் கைகோர்ப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

“இந்த பங்காளித்துவமானது, அசல் கைத்தொழில்துறை தயாரிப்புகளின் விநியோகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதோடு, வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான தொழில்நுட்ப ஆதரவுடன் கூடிய உண்மையான SKF தயாரிப்புகள் கிடைப்பதை உறுதி செய்கிறது.

கைத்தொழில்துறைகளுக்கு அதிகாரமளிக்கவும், செயற்பாட்டுத் திறனை (operational efficiency) மேம்படுத்தவும் நாம் ஒன்றிணைந்துள்ளோம்.” என்றார்.

C.W. Mackie PLC இன் கைத்தொழில்துறை தயாரிப்புகள் பிரிவானது, பல்வேறு கைத்தொழில்துறைகளில் உலகப் புகழ்பெற்ற வர்த்தகநாமங்களின் பல்வேறு தொகுப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதன் குளிர் பதனிடல் மற்றும் வாயுச் சீராக்கல் பிரிவானது (Refrigeration and Air Conditioning Division) Danfoss (டென்மார்க்), Bitzer (ஜேர்மனி), Frascold (இத்தாலி), Roller (ஜேர்மனி), KD (கொரியா), Insulflex (மலேசியா), Aerofoam (ஐக்கிய அரபு இராச்சியம்), Jintian and Hongtai Copper (சீனா) போன்ற வர்த்தகநாமங்களின் பிரத்தியேக விநியோகஸ்தராக திகழ்கின்றது.

இலகுரக இயந்திரங்கள் மற்றும் பற்றவைத்து ஒட்டல் மின்முனைகள் பிரிவு (Lightweight Machinery and Welding Electrodes Division) Cebora (இத்தாலி), Telwin (இத்தாலி), Chosun (தென் கொரியா), Castolin Eutectic (ஐரோப்பா) ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகச் செயற்படுகிறது. இது பற்றவைத்து ஒட்டல் மின்முனைகள், MIG / TIG உபகரணங்கள், plasma cutters மற்றும் பாறை துளையிடும் கருவிகளை வழங்குகிறது.

2008ஆம் ஆண்டு முதல், இந்த நிறுவனம் Hempel Paints (டென்மார்க்) நிறுவனத்தின் பிரத்தியேக விநியோகஸ்தராகவும் விளங்குகின்றது. இது சர்வதேச மற்றும் உள்ளூர் கப்பல் நிறுவனங்களுக்கும், மின்சாரம், பெற்றோலிய இரசாயனங்கள், உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் துறைகளுக்கும் உயர் செயல்திறன் கொண்ட கடல் சார் மற்றும் பாதுகாப்புக்கான பூச்சிடல்களை (protective coatings) வழங்கி வருகிறது.

தமது வலையமைப்பில் SKF இணைந்ததன் மூலம், C.W. Mackie PLC ஆனது இலங்கையில் கைத்தொழில்துறை மற்றும் பொறியியல் துறைகளுக்குக் கிடைக்கும் தீர்வுகளின் வகைகளை விரிவுபடுத்துவதோடு மாத்திரமல்லாமல், நம்பகத்தன்மை மற்றும் புத்தாக்கத்தின் அத்திவாரமாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது.

இந்த ஒத்துழைப்பானது மேம்படுத்தப்பட்ட செயற்பாட்டு ரீதியான செயற்றிறன், அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான பரந்த அணுகல் மற்றும் நாடு முழுவதும் உள்ள கைத்தொழில் துறைகளுக்கான மேம்படுத்தப்பட்ட ஆதரவு ஆகியவற்றை உறுதியளிக்கிறது. இது 125 ஆண்டுகளுக்கும் மேலான அதன் நம்பகமான பங்காளர் எனும் பாரம்பரியத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

SKF நிறுவனம் பற்றி 1907ஆம் ஆண்டு முதல், SKF உலகின் மிகவும் புத்தாக்கமான பெயாரிங்குகள் (Bearings), சீல்கள் (Seals), லுப்ரிகெசன் தொகுதிகள் (Lubrication Systems), நிலைமை கண்காணிப்புத் தீர்வுகள் (Condition Monitoring Solutions) மற்றும் அது தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது. இது உராய்வைக் குறைப்பதை (Reduce Friction) நோக்கமாகக் கொண்டுள்ளது. குறைந்த உராய்வு என்பது சக்தி அதிகம் சேமிக்கப்படுகிறது என்பதாகும்.

உராய்வைக் குறைப்பதன் மூலம், நாம் கைத்தொழில்துறையை மிகவும் புத்திசாலித்தனமாகவும், போட்டித்தன்மையுடனும், அதிக சக்தி திறன் மிக்கதாகவும் மாற்றுகிறோம். இதன் மூலம், குறைவான பயன்பாட்டின் மூலம், அதிகம் சாதிக்கக்கூடிய ஒரு நிலைபேறான எதிர்காலத்தை அனைவருக்கும் கட்டியெழுப்புகிறோம்.

SKF சுமார் 130 நாடுகளில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், உலகளாவிய ரீதியில் சுமார் 17,000 விநியோகஸ்தர் வலையமைப்பைக் கொண்டுள்ளது.

2024ஆம் ஆண்டு வருடாந்த விற்பனை SEK 98,722 மில்லியன் ஆக இருந்ததுடன், ஊழியர்களின் எண்ணிக்கை 38,743 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரங்களுக்கு: www.skf.com ® SKF என்பது SKF குழுமத்தின் பதிவு செய்யப்பட்ட ஒரு வர்த்தக முத்திரை (Registered Trademark) ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இந்தியா மற்றும் பாகிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக இலங்கைக்கு எந்தவிதமான பாதுகாப்பு...

கண்களைக் கட்டிக்கொண்டு நடந்த கொழும்பு மேயர்.

பார்வைக் குறைபாடுள்ளவர்கள் தினமும் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நேற்றையதினம்...

அல் குர்ஆன் மொழிபெயர்ப்பில் தீவிரவாதக் கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளதாம்; தடுமாறும் உலமாக்களின் மீள்பரிசீலனைக் குழு

 -அபூ அய்மன் மதம் சார்ந்த தவறான புரிதல் என்பது அறியாமையல்ல. அவை திட்டமிட்டவகையில்...

வெலிகம பிரதேச சபையின் வெற்றிடத்துக்கு சமீர தனுஷ்க டி சில்வா நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா...