உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றிய சஜித்

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றினார்.

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புது டெல்லியில் உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் (Indian Council of World Affairs-ICWA) சிறப்புரை நிகழ்த்தினார்.

இதில், உலகளாவிய இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பரிணாமம் கண்டு வரும் வகிபாகத்தை பாராட்டி “beacon of strategic autonomy and South–South cooperation.” என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு விபரித்தார்.

இதன் பிரகாரம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமான நாகரிக மற்றும் ஜனநாயக உறவுகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டுமொறு முறை உறுதிப்படுத்தியதோடு, இந்தியப் பெருங்கடலை அமைதி மற்றும் ஒத்துழைப்புக்கான வலயமாக பாதுகாப்பதற்கான கூட்டுப் பொறுப்பையும் இங்கு சுட்டிக்காட்டினார்.

மேலும் பூகோளப் பொருளாதாரத்தின் எழுச்சி மற்றும் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் எதிர்பார்க்கப்படும் கட்டமைப்பு மாற்றத்தை எட்டிக் கொள்ள முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாகரிக மற்றும் தொழில்நுட்ப சக்தியாக இந்தியா உருவெடுப்பதை எடுத்துக்காட்டி, அதன் டிஜிட்டல் ஜனநாயகம், தயாரிப்புகள் மற்றும் நம்பகமான உலகளாவிய கூட்டாண்மைகளை போஷிப்பதில் கண்டு வரும் வெற்றிகள் தொடர்பிலும் அவர் பாராட்டினார்.

குறிப்பாக மின்சார வாகனங்கள் மற்றும் விநியோக சேவைத் துறைகளில் இந்தியாவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சிகளுடன் இணைவதற்கான இலங்கையின் விருப்பத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதிக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் மற்றும் இயக்குநருமான பிலிப் வார்டுக்கும்...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை (07)...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்

இன்றையதினம் (05) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய...

முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது...