இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று வியாழக்கிழமை (27 ) காலை 10.26 மணியளவில் குறித்த நிலடுக்கம் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா பகுதியில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து நாட்டைச் சூழவுள்ள கரையோரத்தை அண்டிய பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

