சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டம்

Date:

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அம்பியூலன்ஸ்  வண்டி படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக  அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுவசெரிய நிதியத்தின் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களின் திறன் மேம்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பயிற்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குத் தேவையான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும், உலகில் கிடைக்கும் சமீபத்திய தொழில்நுட்பத்தை இணைத்து இந்த நோயாளர் காவு வண்டி சேவையை புதுமைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் 100 நோயாளர் காவு வண்டிகளை வாங்குவதற்கு இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், அதனை தவிர ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன் உதவியின் கீழ் 20 நோயாளர் காவு வண்டிகளும் அனபளிப்பாக மேலும் 25 நோயாளர் காவு வண்டிளையும் பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...