டிட்வா புயல் இன்றுடன் முழுமையாக இலங்கையை விட்டு விலகும்!

Date:

டிட்வா புயல் (29) சனிக்கிழமை காலை 8.00 மணி நிலைவரப்படி, ஏற்கனவே குறிப்பிட்டவாறு தற்போது சுண்டிக்குளத்தில் மையம் கொண்டு கடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது.

(காலை 8.00 மணி) மையத்தின் 30 வீதமான பகுதி கடலுக்குள் சென்றுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.

டிட்வா புயல் இன்று நண்பகலளவில் முழுமையாக கடலுக்குள் சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பேரழிவுகளை ஏற்படுத்திய டிட்வா புயல் இன்றுடன் முழுமையாக இலங்கையை விட்டு விலகும்.

இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மேற்கு பகுதிகள் சற்று கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

வடக்கு மாகாணத்தின் குளங்களுக்கு இன்றும் அதிக நீர்வரத்து இருக்கும். ஆகவே பெருநிலப்பரப்பின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.  வடமேல் மாகாணம் இன்று கனமழை யைப் பெறும் வாய்ப்புள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு வானிலை இன்று படிப்படியாக சீரடையும் என  நாகமுத்து பிரதீபராஜா மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...