தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன

Date:

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (19) அதிகாலை தரையிறங்க திட்டமிடப்பட்ட மூன்று சர்வதேச விமானங்கள், அடர்த்தியான மூடுபனி காரணமாக, தெரிவுநிலை கணிசமாகக் குறைந்ததால் திருப்பி விடப்பட்டன.

இன்று (19) காலை கட்டுநாயக்க பகுதியில் நிலவிய பனிமூட்டம் காரணமாகவே இந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL- 881 விமானம் மற்றும் சவூதி அரேபியாவின் ரியாத்திலிருந்து வந்த UL-266 விமானம் ஆகியன மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

அத்துடன் சவூதி அரேபியாவின் தம்மாமிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-254 விமானம் இந்தியாவின் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

பின்னர், விமானப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மூடுபனி தணிந்ததால், விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் தரையிறங்க முடிந்தது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகள், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், தெரிவுநிலை மேம்பட்டவுடன் வழக்கமான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தயாசிறி எம்.பியின் நடவடிக்கை குறித்து விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழு

தயாசிறி ஜயசேகர எம்.பியின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில்...

பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்கள் சவூதியில் அடக்கம்

சவூதி பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்களை சவூதியில் அடக்கம் செய்ய முடிவு...

நிலச்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக...

பெரும்பாலான இடங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (18) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மாகாணங்களில்...