இந்த ஆண்டின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதில் 633 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு பராமரிப்பு வேலைக்கென சென்றுள்ளனர்.
இஸ்ரேலில் வீட்டு பராமரிப்பு வேலைக்கென நேற்றைய தினம் 185 பேரைக் கொண்ட குழுவொன்று சென்றுள்ளது. அவர்களுக்கு விமான டிக்கட்டுக்களை வழங்கும் நிகழ்வு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைநகர் கோசல விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இஸ்ரேலில் காணப்படும் 2000க்கும் அதிகமான பராமரிப்பு சேவையாளர்களுக்கான சந்தர்ப்பங்கள் இலங்கையர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
