அஸ்வெசும வருடாந்த தகவல்களை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி சபை தெரிவித்துள்ளது.
2023ம் ஆண்டில் அஸ்வெசும கொடுப்பனவிற்கென முதற்தடவையாக பதிவு செய்யப்பட்டு தற்போது பிரதிபலனை பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் இந்த புதுப்பித்தல் செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்படுவார்கள் என சபை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மீள தகவல்களை உறுதி செய்யும் போது குடும்ப உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் செயற்பாட்டிலுள்ள கையடக்க தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்கள் இருப்பது கட்டாயமென அறிவிக்கப்பட்டுள்ளது.
