பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

Date:

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை நினைவுகூரும் வகையில், Inglish Razor (இங்கிலிஷ் ரேஸர்) வர்த்தகநாமம் ஆனது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ரொட்டராக்ட் கழகத்துடன் (Rotaract Club) இணைந்து, ஒரு முக்கிய சமூக முயற்சியான: A Promise for Her (அவளுக்கான வாக்குறுதி) திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் ரீதியான வன்முறையின் (Digital Violence) அபாயகரமான அதிகரிப்புக்கு எதிரான முனைப்பான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென இலங்கை இளைஞர்களுக்கு, குறிப்பாக இவ்வர்த்தக நாமத்தின் மைய வாடிக்கையாளர்களான இலட்சியமுள்ள மற்றும் நம்பிக்கைமிக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், இந்த திட்டமானது நவம்பர் 25ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாட்டில் இணையவழி துஷ்பிரயோகம் அதிகரித்திருப்பதை 2024ஆம் ஆண்டு தரவுகள் காண்பிக்கின்றன.

அதற்கமைய, 2019இல் 10 ஆக இருந்த நாளாந்த சம்பவங்கள் 59 ஆக உயர்வடைந்துள்ளன.

புகைப்பட அடிப்படையிலான துஷ்பிரயோகம் (Image-based abuse), இணைய அச்சுறுத்தல் (cyber harassment), ஆள்மாறாட்டம் (impersonation) ஆகியன உள்ளடங்கலாக, வருடாந்தம் 21,000 இற்கும் அதிகமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

பல பாதிக்கப்பட்டவர்கள் சமூக காரணங்களால் இச்சம்பவங்களை முறைப்பாடு செய்யாத நிலை காணப்படுகின்றமையால், இந்த எண்ணிக்கைகள் உண்மையான எண்ணிக்கையின் ஒரு சிறு பகுதி மாத்திரமாக உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிகழ்வில் புகழ்பெற்ற உளவியலாளர் ரிஷினி பண்டாரா உள்ளிட்ட முக்கிய செயற்பாட்டாளர்கள் மற்றும் நிபுணர்கள் இணைந்திருந்தனர். இங்கு ரிஷினி பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் உணர்வு மற்றும் உளவியல் பாதிப்புகளை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தர்ஷிகா குமாரி உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்துகொண்டனர். அவர் இது குறித்த சட்ட விடயங்களை இங்கு எடுத்துக் கூறினார். புகழ்பெற்ற உளவியலாளர் திருமதி ரிஷினி பண்டார, பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் உணர்வு ரீதியான மற்றும் மன ரீதியான பாதிப்புகளை இங்கு எடுத்துக் கூறினார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த, TruVic Consumer நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி டி கூஞ்ஞ, “உண்மையான துணிச்சலானது, தோற்றத்தின் வெளிப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என Inglish Razor ஆகிய நாம் நம்புகிறோம்.

ஒரு நபரை உண்மையில் பிரகாசிக்கச் செய்ய வைப்பது அவரது குணாதிசயமும் ஒருமைப்பாடும் தான் என்பதை வலியுறுத்த, இந்த சமூகப் பிரச்சினைக்கு பதிலளிக்கும் வகையில், எமது வர்த்தகநாம நெறிமுறையை (brand ethos) நாம் மீள்வரையறை செய்துள்ளோம்.

இதன் மூலம், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராகப் போராட இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறோம்.” என்றார்.

TruVic Consumer ஆனது தனிநபர் பராமரிப்பு பொருட்கள், வாசனைத் திரவியங்கள், ஒப்பனைப் பொருட்கள், வீட்டுப் பராமரிப்புப் பொருட்களை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்று விளங்குகின்றது. இது இலங்கையில் Inglish Razor, Polo, La Brezza உள்ளிட்ட உலகளாவிய வர்த்தகநாமங்களுக்கான தாயகமாக விளங்குகின்றது.

டிஜிட்டல் உறுதிப் பிரமாணம்:
அன்புள்ள சகோதரியே, ஒரு COMMENT மூலமாகவோ; அன்புள்ள அக்காவே, ஒரு SHARE மூலமாகவோ; அன்புள்ள தோழியே, ஒரு LIKE மூலமாகவோ, MESSAGE மூலமாகவோ, அநாகரீகமான கோரிக்கை மூலமாகவோ, அல்லது டிஜிட்டல் உலகில் வரும் அச்சுறுத்தல் மற்றும் வன்முறைக்கு எதிராக ஒரு சகோதரனாக நான் துணை நிற்பேன் என உறுதிப்பிரமாணம் செய்கிறேன்.

இது தொடர்பான ஒரு மில்லியன் உறுதிப் பிரமாணத்தை எடுக்க, (http://www.pickoriginals.com/pledge) ஊடாக அல்லது இந்த இயக்கத்தில் இணைய விரும்புவோர் நாடளாவிய ரீதியில் காணப்படும் QR குறியீட்டு பதாகைகளை அடைவதன் மூலம் இணையுமாறு அனைத்து இலங்கை ஆண்களுக்கும் Inglish Razor அழைப்பு விடுக்கிறது.

சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த உறுதிமொழிகள், கொள்கை வகுப்பாளர்களிடம் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...