பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

Date:

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து விசாரித்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சுஜாதா அழகப்பெருமவினால் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்னவிடம் நேற்று (24) கையளிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தின் பெண் பணியாளருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக 2025.01.07ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானினால் சபா மண்டபத்தில் உரையாற்றும்போது கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டதுடன், குறித்த விசாரணை தொடர்பில் முறைப்பாடு செய்த நபர் திருப்தியடையாத காரணத்தினால் இது பற்றி வெளியக விசாரணையை நடத்துவதற்குப் பாராளுமன்ற பணியாளர் ஆலோசனைக் குழுவில் 2025.07.25ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சுஜாதா அளகப்பெரும அவர்களினால் மேற்படி விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் அழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இந்த இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் நேற்றையதினம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையின்படி, விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளிலிருந்து முறைப்பாடு செய்த பெண் பணியாளர் எவ்வித பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் ஆளாகவில்லை என்பது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அதே பிரிவில் வேறு எந்த பெண் பணியாளருக்கும் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லையென்றும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...

இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்கும் யுனிஸ்ஸா பல்கலைக்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து.

புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி மற்றும் மலேஷியாவின் சுல்தான் செய்னலாப்தீன் பல்கலைக்கழகம்...