மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

Date:

அபூ அய்மன்

 பின்னணி

பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி வாழ்ந்துவந்த இலங்கை முஸ்லிம்களின் சாபக்கேடே சூழ்ச்சிகார ‘அபூஹிந்த்’. இ்ந்த அடைமொழியானது திரைமறைவில் இருந்துகொண்டு சில பகடைக்காய்களை நகர்த்தும் ஒரு தீய சக்தியைக் குறிக்கும்.

2020 பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி இலங்கைப் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான குழு அறிக்கையின் பிரகாரம் முகம் மூடுவதை தடுத்தல், இலங்கையின் கல்விமுறைமை சீர்திருதித்தம், சமயம் சார்ந்த வெளியீடுகள் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தல், வெளிநாட்டு பிரஜைகள் வருகையை கட்டுப்படுத்தல், சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தல் என பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இது ஒரு அறிக்கையே தவிர சட்ட ஏற்பாடு அல்ல. இதில் குறிப்பிடப்பட்டிருந்த பல விடயங்களின் உண்மைத்தன்மையும் யதார்தமும் பலரதும் விமர்சனத்துக்கும் உட்பட்டதாகும்.

 குழு நியமனமும் நோக்கங்களும்

இந்தப் பின்னணியில், 2021.04.19 ஆம் திகதி அப்போதைய முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் ஊடாக ‘புத்தக மீளாய்வு மற்றும் வெளியீடுகள் தொடர்பான 09 உறுப்பினர்களைக் கொண்டதொரு குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவின் நோக்கங்களாவன,

  1. இறக்குமதி செய்யப்பட்ட இஸ்லாமிய புத்தகங்களின் உள்ளடக்கம் தொடர்பாக அவற்றை பாதுகாப்பு அமைச்சிலிருந்து விடுவிக்கும் நோக்கில் பரிந்துரை செய்தல்
  2. இறக்குமதிசெய்யப்பட்ட இஸ்லாமிய புத்தகங்களை மீள்பரிசீலனைசெய்து பரிந்துரைப்பதற்குத் தகுதியான கல்வியலாளர்களை பரிந்துரை செய்தல்
  3. உள்நாட்டு மக்களின் தேவை நிமித்தம் தமிழ், சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட எந்தவொரு மொழியிலும் வெளியிடப்பட வேண்டிய இஸ்லாமிய நூல்களை பரிந்துரை செய்தல்
  4. தேசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டுமெனக் கருதும் பன்மொழி இஸ்லாமிய நூல்களைப் பரிந்துரை செய்தல்.

இந்தக் குழு குறித்த நோக்கங்களை எட்டியுள்ளதா?

நியமனக் கடிதத்தின் பிரகாரம், இந்தக் குழுவுக்கு வழங்ப்பட்ட பொறுப்பு யாதெனில் இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்களின் உள்ளடக்கத்தை மாத்திரம் பரிசீலித்து அது தொடர்பாக இறக்குமதிக்குத் தகுதியானதா என பரிந்துரைத்தல், உள்ளடக்கத்தில் ஏதும் மயக்கமிருப்பின் அது தொடர்பான ஆழமாக வாசிப்பு தேவையெனக் கருதுமிடத்து அதற்கானதொரு  தகுதியான கல்வியிலாளர் குழுவை பரிந்துரைப்பதுடன், புதியதாக வெளியிடப்பட வேண்டும் அல்லது மொழிபெயர்க்கப்பட வேண்டும் என கருதும் சிறந்த இஸ்லாமிய புத்தகங்களின் பெயர்களை பரிந்துரை செய்தலாகும்.

இந்தக் குழு தனக்கு வழங்கப்பட்ட பணியை சரியான முறையில் அறிந்திருந்ததா அல்லது தனது கடமையை சீரான முறையில் செய்யுள்ளதா என்ற விடயத்தில் 23 இலட்சம் முஸ்லிம்களும் மிகவும் அவதானமாகவுள்ளனர்.

இந்தக் குழு தனக்கு வழங்கப்பட்ட பணியில் குறிப்பாக மூன்றாவது மற்றும் நான்காவது நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு  எந்தவொரு இஸ்லாமிய புத்தகத்தையும் புதிதாக வெளியிடுவதற்கோ அல்லது  அறபு, உருது, துர்க்கிய, பாரசீக, சீன,  ஹிந்தி உட்பட சர்வதேச மொழிகளில் பிரசுரிக்கக்கட்ட சிறந்த வெளியீடுகளை தொிவுசெய்து சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் மொழிமாற்றம் செய்வதற்கான பரிந்துரைகளை முன்வைத்தற்கான ஆதாரங்கள் அவர்களது கூட்ட நடப்பு அறிக்கைளில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

அதேபோல இரண்டாவது நோக்கமான மீள் பரிசீலனைக்கான கல்வியளாளர் பெயர்களையும் இந்தக் குழு  பரிந்துரைத்ததாக அறியக்கிடைக்கவில்லை. அதாவது கதீபுக்குரிய கடமையை முஅத்தின் செய்ய முட்பட்டதால்  ஏற்பட்ட பரிதாபம் யாதெனில் இன்று 20 மாதகாலமாக 25,000 அல்குர்ஆன் பிரதிகள் அநியாயமான முறையில் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கிறன.

“நாங்கள் இலட்சக்கணக்கான அல் குர்ஆன் பிரதிகளை வெளியிட்டுள்ளோம்… இந்த தழிழ் மொழிபெயர்பில் அடிக்குறிப்பு இல்லை.

அதனை அனுமதிக்க முடியாது” என தாம் மிகவும் தியாகத்துடனும், வினைத்திறனுடனும் எவ்வித கொடுப்பனவுகளுமின்றி  செயற்டுவதாக  குழு உறுப்பினர்கள் குறிப்பிடுவதாக சில சமூக ஊடகங்களில் அறியக்கிடைக்கிறது.

சரியாக முறைமையைக் கடைப்பிடிக்காது நாமே யாவும் அறிந்தவர்கள் என்ற மனநிலையில் வேலைசெய்ய முயற்சிப்பது ஒரு புத்திசாதுரியமான விடயமல்ல.

ஒட்டுமொத்தமாக இந்தக் குழு தனக்கு வழங்கிய பொறுப்பை முழுமையாகவே கோட்டைவிட்டு நூற்றுக்கு நுறுவீதம் தோல்வியடைந்த தனது இயலாமையை முழு உலகத்துக்கும்  வெளிக்காட்டி புனித அல்குர்ஆனின் புனிதத்துவத்தை நகைப்புக்கு உட்படுத்தியுள்ளதாக சில உலமாக்கள் விசனம் தொிவிக்கின்றனர்.

யார் இந்த அபூஹிந்த்?

மீள்பரிசீலனைக்கான ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ என ஒரு சமூக ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பொதுச் செயலாளரும் மீள்பரிசீலனைக் குழு உறுப்பினருமான அஷ்சேய்க் அர்க்கம் நூராமித் வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தக் குழு வெறுமனே ஒரு இறப்பர் முத்திரை (Rubber Stamp) இவர்களை அபூஹிந்தின் ஏவலுடனான சில முல்லாக்கள் பிரயோகித்துள்ளனர் என்பது வெளிப்படை.

இங்கு அவர் முன்னுக்குப்பின் முரண்பட்ட பல விடயங்களைக் கொட்டுகிறார். இது ஒரு தவறான நடைமுறை என்பதை தான் உணர்ந்ததாகவும், தான் இதற்கெதிராக குரல்கொடுக்க வெளிக்கிட்டதாகவும் தன்னை பொறுமை காக்கச் சொன்னதாக கூறியதாகவும் அவர் தனது மன ஆதங்கங்களை வெளிப்படுத்துகிறார்.

தாங்கள் மிகவும் இக்கட்டான, நெருக்கடியான, நிர்ப்பந்தமிக்க ஒரு சூழ்நிலையிலேயே இவ்வாறான தீர்மானங்களுக்கு உடன் வேண்டியிருந்தாகவும் அறியக்கிடைக்கிறது. அதுவும் வாஸ்தவம்தான்,  ஏனெனில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் சாம்பல் முட்டியை ஜனாஸா தொழுகை நடாத்தி அடக்கம் செய்யலாம் என்று பத்வா வழங்குவதில் அழுத்தம் செய்த அதே அபூஹிந்தின் மறைந்த கைகளும் இருந்திருக்கலாம்.

அல்குர்ஆனுக்கு அடிக்குறிப்பு இடப்படல் வேண்டும்  என்பதில் அபூஹிந்த் உறுதியாக செயற்பட்டுள்ளமை புலப்படுகிறது. இந்த அபூஹிந்தினதும் முல்லாக்களினதும் பெயர்களை வெளிப்படுத்துவது இந்தக் குழுவின் கடமையாகும்.

 அனைத்து அங்கத்தவர்களும் கையொப்பமிடுவது கட்டாயமா?

தாம் இந்த Framework இற்கு உடன்டவில்லையாயின் அவர்கள் குறித்த குழுவிலிருந்து ஒதுங்கியிருக்கலாம். தனக்கு உடன்பாடில்லாத விடயங்கள் பரிந்துரை செய்யப்படுமிடத்து  அங்கத்தவர்கள் குறித்த ஆவனத்தில் கையொப்பமிடாது விலகியிருக்கலாம். இன்றேல்,  முரண்  அறிக்கை மூலம் தனது நிலைப்பாட்டை தெளிவாக விளக்கியிருக்கலாம்.

ஆனால் இந்த எட்டு உறுப்பினர்களும் அவ்வாறு செய்யவில்லை, அனைத்து விடயங்களிலும் ஒருமித்த கருத்தில் கூட்டாகவே வழிநடாத்தப்பட்டுள்ளனர் என்பதை ஆவனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

சமூகம் படிக்க வேண்டிய பல முன்னோடியான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. தோ்தல் முறைமை தொடர்பான தொிவுக் குழுவின் பரிந்தரைகள் சிறுபான்மைச் சமூகத்துக்கு பாதகமானது என புலப்பட்டதையிட்டு அன்றைய குழு உறுப்பினர்களான ரவூப் ஹகீம், அநுர திஸாநாயக, கபீர் ஹாசிம், சுமந்தின், மனோ கணேஷன் ஆகியோர் குறித்த அறிக்கையில் கையொப்பமிடாது தவிர்ந்து கொண்டனர்.

மாகாணசபை எல்லை நிர்நயக்குழு உறுப்பினரான மார்ஹும் பேராசியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் அன்று தனியாளாக நின்று முஸ்லிம் சமூகத்துக்கான தனது முரண் அறிக்கையை சம்ர்ப்பித்தார். எல்லை நிர்ணயக் குழுவின் முழு அறிக்கையும் பாராளுமன்றத்தில்  தோற்கடிக்கப்பட்டதுடன் தோ்தல் முறைமையும் ஸ்தம்பிதமடைந்தது.

 முடிவுரை

புனித அல் குர்ஆனை கொச்சைப்படுத்தி “புனித அல்குர்ஆன் புதிய ஏற்பாட்டு” என்ற ஒர தவறான பிரவேசத்தை உருவாக்குவதற்கானதொரு  புதிய முயற்சியை இந்தக் குழு முன்னெடுத்துள்ளதா என்ற விமர்சனம் இன்று மக்கள் மனதில் எழுந்துள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்மிய்யா உள்ளளிட்ட அனைத்து இஸ்லாமிய சிவில் சமய அமைப்புக்களும் விழிப்புணர்வுடன் செயற்படுவதுடன், இந்தக் குழுவின் பெறுப்பற்ற செயலை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

நுற்றக்கு நூறு வீதம் முழுமையாகவே தனது இயலாமையை வெளிக்காட்டிய இந்த மீள்பரிசீலனைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் சமூக நலன் மற்றும் அல்குர்ஆனின் புனிதத்துவம் கருதி உடனடியாக பதவி விலகுவதுடன் பொது மன்னிப்புக் கோரவேண்டும்.

இனியும் இவ்வாறான தவறுகள் நடக்காது இருக்க  பொறுப்புடன் செயற்படுவதை உறுதிசெய்வது முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தின் தார்மீகப் பணியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 14 புதிய செக்-இன் கவுண்டர்கள் திறந்து வைப்பு

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட...