ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

Date:

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இருவர் கொல்லப்பட்டனர்.

பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் திகதி முதல் போராட்டங்கள் நடைபெற்ற போராட்டங்களால் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில், அங்குள்ள 50 மாவட்டங்களில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டு 25,000 பேர் காயமடைந்தனர்.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இருவர் கொல்லப்பட்டனர்.

பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஆண்டு ஜூலை 1 முதல்  நடைபெற்ற போராட்டங்களால் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில், அங்குள்ள 50 மாவட்டங்களில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டு 25,000 பேர் காயமடைந்தனர்.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் தலைநகர் டாக்காவில் பல நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டக்காரர்கள் பேரணிகளை நடத்தினர்.

சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து வன்முறைகள் ஏற்படும் என்று எதிர்பார்த்து டாக்கா மற்றும் பங்களாதேஷின் பல்வேறு இடங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த காவல் துறையினருடன் அவர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களை கலைக்க முயன்ற காவல்துறையினர், அவர்கள் மீது தடியடி நடித்தனர். மேலும், கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தி அவரை அங்கிருந்து கலைத்தனர்.

இதனால், கோபமடைந்த போராட்டக்காரர்கள், காவல் துறையினர் மீது செங்கல் உள்ளிட்ட பொருள்களை வீசி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

பங்களாதேஷின் தந்தை என்றழைக்கப்படுபவரும், ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீடு அமைந்துள்ள தன்மோண்டி பகுதிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்குள்ள கடைகள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை அடித்து உடைத்துப் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் கடும் பதற்றம் நிலவியது.

இந்தப் போராட்டத்தில் இதுவரை பலர் காயமடைந்துள்ள நிலையில் 2 பேர் பரிதாபமாக பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மத்ரஸா மாணவன் மரணம்: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எழும் தீவிர கேள்விகள்

வெலிமடை மதரஸா மாணவன் ஸஹ்தி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக நாடு...

காத்தான்குடியில் ஈச்ச மரமும் கத்தாரில் அரச மரமும்…!

- சஜீர் முஹைதீன் இது வேற எங்கயும் இல்ல கட்டார்தான் இது. ஒரு...

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி...

காசாவுக்கான ட்ரம்பின் திட்டத்திற்கு ஐ.நா. ஆதரவு: ஹமாஸ் நிபந்தனைகள் நிராகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு ஐ.நா. ஒப்புதல்...