இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திக்கிறேன்: தமிமுன் அன்சாரி அறிக்கை

Date:

டிட்வா புயல் மற்றும் இடைவிடா கனமழையால் இலங்கை முழுவதும் ஏற்பட்ட பெரும் சேதங்களையும், வெள்ளப் பாதிப்புகளையும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் காணும் போது ஆழ்ந்த வேதனை ஏற்படுகிறது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மு. தமிமுன் அன்சாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர்,

“இந்த பேரிடரால் பல குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். வீடுகள், சொத்துகள், வாழ்வாதாரம் ஆகியவை இழந்த மக்களின் துயரத்தை நாங்கள் நெருக்கமாக உணர்கிறோம்.

இந்த கடினமான நேரத்தில் இலங்கை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்,” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் விரைவாக கிடைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேரிடர் நெருக்கடியில் சிக்கிய இலங்கை மக்களுக்கு தனது பிரார்த்தனைகள், ஆதரவு மற்றும் மனிதநேய ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்குவதாக அன்சாரி அவர்கள் உறுதியளித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...