பார்வைக் குறைபாடுள்ளவர்கள் தினமும் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நேற்றையதினம் கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தஸார் பார்வைக் குறைபாடுள்ளவர்கள் குழுவுடன் இணைந்தார்.
மேயர் பல்தஸார், பார்வைக் குறைபாடுள்ளவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அனுபவிக்க, கண்களைக் கட்டிய நிலையில் கொழும்பில் நடந்து சென்றார்.
இலங்கையின் பார்வைக் குறைபாடுள்ள முதல் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவும் இணைந்து கொண்டார்.
“எனக்குக் கண்கள் கட்டப்பட்டுள்ளன, எனவே பார்வை இல்லாமல் இருப்பது எப்படி என்பதை நான் புரிந்துகொள்கிறேன்,” என்று கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தஸார் கண்களைக் கட்டிய நிலையில் தெரிவித்துள்ளார்.
