கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக, அவ்வீதி ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கடையில் இருந்த பலர் இடிபாடிகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை மீட்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் ஆபத்தான சூழலைக் கருத்தில் கொண்டு, இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், இயன்றவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
