நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த. உயர் தர பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெறவிருந்த பரீட்சைகள் இடம்பெறமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் ஊடாக அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
