தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

Date:

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரைக்கும் சுமார் 1.5 மில்லியன் தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள்  கிடைத்துள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், அடையாள அட்டைகளை அச்சிடும் பணிகள்  துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எத்தகைய சூழ்நிலயிலும், தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2005ஆம் ஆண்டு பிறந்த விண்ணப்பதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள், ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

எதிர்வரும் டிசம்பர்  முதல் 2006 ஆம் ஆண்டு பிறந்த பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கும் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணியை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...