அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி, குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ ஆகியோர் போட்டியிட்டனர்.
அக்டோபர் 25 தொடங்கிய வாக்குப்பதிவின் முடிவில் ஸோரான் மம்தானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, 1969 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகளவிலான வாக்குகளாக 20 இலட்சம் வாக்குகள் பதியப்பட்டதாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் ஸோரான் மம்தானிதான், நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மற்றும் இந்திய – அமெரிக்க மேயராகவும், தென்னாப்பிரிக்காவில் பிறந்து மேயரானவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
