250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் தற்போது வழங்கப்படும் வவுச்சர்கள் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரின் தலைமையில் பாராளுமன்ற குழு மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது
கல்வி அமைச்சும் கைத்தொழில் அமைச்சும் இணைந்து மேற்கொள்ளும் இந்தப் புதிய கூட்டுத் திட்டத்தின் கீழ், 250க்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட பாடசாலைகள், 251–500 மாணவர்களைக் கொண்ட தோட்டப் பாடசாலைகள், விசேட தேவைகள் உள்ள மாணவர்களை கொண்ட பாடசாலைகள் மற்றும் பிரிவெனா நிறுவனங்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் வவுச்சரைப் பயன்படுத்தி உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பாடசாலை காலணிகளை வாங்க தகுதி பெறுவார்கள்.
