பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக காகிதப் பைகளுக்கு பரிந்துரை!

Date:

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்கும் முயற்சியில் சுற்றாடல் அமைச்சு தலைமை வகிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தின் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரைத்துள்ளது.

பொருட்கள் கொள்வனவு செய்யப்படும்போது பைகளுக்குக் கட்டணம் அறவிடுவதற்கான முன்மொழிவு குறித்து குழுவில் கலந்துரையாடப்பட்டபோது இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டது.

கட்டணம் அறவிடுவதன் மூலம் பொலித்தீன் பயன்பாட்டை அர்த்தமுள்ள வகையில் குறைக்க முடியுமா என்றும், கட்டணத் தொகையை யார் தீர்மானித்தது என்றும் குழு உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அதிகாரிகள், தற்போதுள்ள வர்த்தமானி அறிவிப்பில் பொலித்தீன் பைகளுக்கு எந்தவிதமான கட்டணமும் விதிக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தினர்.

மீன்பிடி, நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் இந்தக் குழு கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சுற்றுலாத்துறை வருமானமாக முதல் 10 மாதங்களில் 2,659 மில். டொலர்கள்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானமாக 2,659 மில்லியன்...

மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் குற்றவாளி என தீர்ப்பு!

பங்களாதேஷ் வன்முறையில் இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக்...

கெஹெலிய குடும்பத்திற்கு எதிராக 3 வழக்குகளில் குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள்...

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத்...