அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மன நலனைப் பேணும் வகையில் பொழுதுபோக்கு நிகழ்வுகள் முன்னெடுப்பு

Date:

கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம்களான மீதொட்டமுல்ல அரச நெல் சந்தைப்படுத்தல் சபை களஞ்சிய வளாகம் மற்றும் கொலன்னாவ டெரன்ஸ் என். டி. சில்வா மகா வித்தியாலய வளாகங்களில், குழந்தைகளின் மன நலனைப் பேணும் வகையில் குறுகிய செயற்பாடு சார்ந்த மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் போது, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர்,  சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்களின் இந்த முன்மொழிவானது, முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகள் முகாம் அதிகாரிகளால் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து ஒழுங்கமைக்கப்பட்டன.

ஏற்பட்ட இந்த அனர்த்தமானது சிறுவர்களின் அன்றாட நடவடிக்கைகளை சீர்குலைத்ததுள்ளதுடன், அன்புக்குரியவர்களின் இழப்பு, பாடசாலை மற்றும் முன்பள்ளிக் கல்வி தடைப்படுதல் போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளது. இது தனிமை, உணர்ச்சி ரீதியான துயரம், பயம் மற்றும் செயற்பாடு குறைந்த நிலை போன்ற உணர்வுகளுக்கு வழிவகுத்துள்ளது.

இந் நிகழ்ச்சிகள், சிறுவர்கள் இத்தகைய உணர்வுகளிலிருந்து மீண்டுவருவதற்கும், இயல்பு நிலையை மீண்டும் பெறுவதற்கும் உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டனவாகும்.

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...