ஆழமான தாழமுக்கம், காங்கேசன்துறையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு பகுதியில் வடக்காக 12.3 அட்சேரகையிலும் கிழக்காக 80.6 தீர்க்கரேகையிலும் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை தொடர்ந்தும் நாட்டை விட்டு அகற்று வடக்கு நோக்கி பயணித்து மேலும் வலுவிழக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்து.
வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் பல இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
