பேரிடரால் சேதமடைந்த மத ஸ்தலங்களை கட்டியெழுப்ப ஹஜ் குழுவிடமிருந்து ரூ. 5 மில். நன்கொடை

Date:

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களின் மறுசீரமைக்கும் பணிகளுக்காக, ஹஜ் குழுவிடமிருந்து ரூ.5 மில்லியன் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இன்று (08) முற்பகல் ரூ. 5 மில்லியன் நன்கொடையை புத்தசாசனம், மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சிடம் ஹஜ் குழு வழங்கியுள்ளது.

இந்த நன்கொடைக்கான காசோலையை ஹஜ் குழு தலைவர், பட்டய கணக்காளர் ரியாஸ் மிஹ்லார், புத்தசாசனம், மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி மற்றும் மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் ஆகியோரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் முஸ்லிம் மத அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், ஹஜ் குழு உறுப்பினர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு,...

குவைத்திற்கான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத்திற்கான விமான...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

அவர்களுக்கு ரொட்டியையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொடுங்கள்: உலகக் கோப்பை குறித்த ஓர் அழகிய சிந்தனை

-நூஹ் மஹ்ழரி (தமிழ்நாடு) உலகக் கோப்பை கால்பந்தாட்ட காய்ச்சல் உலகம் முழுவதும் பற்றி...